A group of people with hearing, visual and physical disabilities from all over the island of Disability Organizations Joint Front participated in an observation tour of the Parliament today (17).
This tour was organized according to the request made by this Joint Front to the Secretary General of Parliament Mrs. Kushani Rohanadeera to get an understanding of the parliamentary process as well as to give the opportunity to meet the Members of Parliament.
The Public Outreach section of the Department of Communications of Parliament provided necessary information to the group about the parliamentary process. Later, this group met with the Chairman of the Parliamentary Caucus for Persons with Disabilities, Hon. Dullas Alahapperuma, Member of Parliament and engaged in a friendly discussion. The group expressed facts about the issues and challenges faced by their community. The group mentioned that they do not want special opportunities in the society but equal opportunities.
Hon. Dullas Alahapperuma, Member of Parliament, stated that it is good that there are more discussions than ever in society in order to meet the needs of the disabled community and provide equal opportunities for them.
The Deputy Co-Chairperson of the Parliamentary Caucus for Persons with Disabilities, Member of Parliament Hon. Madhura Withanage, Member of Parliament Hon. Jayantha Samaraweera and Commissioner General of the Elections Mr. Saman Sri Ratnayake as well as members Disability Organizations Joint Front participated in this event.
Following the tour of parliament, the group posed for a group photo with the Prime Minister Hon. Dinesh Gunawardena.
ආබාධ සහිත පුද්ගලයින් පාර්ලිමේන්තු සංචාරයක
ආබාධ සහිත පුද්ගල සංවිධාන ඒකාබද්ද පෙරමුණේ දිවයින පුරා ඒකාබද්ධ සිටින ශ්රව්ය, දෘශ්ය හා ශාරීරික ආබාධ සහිත පිරිසක් අද (17) පාර්ලිමේන්තුවේ නිරීක්ෂණ චාරිකාවක නිරතවූහ.
ඒ පාර්ලිමේන්තු ක්රියවලිය පිළිබඳ අවබෝධයක් ලබාගැනීමට මෙන්ම පාර්ලිමේන්තු මහජන නියෝජිතයින් මුණගැනීම සඳහා අවස්ථාව ලබා දෙන ලෙස ශ්රී ලංකා පාර්ලිමේන්තු මහලේකම් කුෂානි රෝහණධීර මහත්මියගෙන් සිදුකළ ඉල්ලීමට අනුවයි.
මෙහිදී පාර්ලිමේන්තු සන්නිවේදන දෙපාර්තමේන්තුවේ, මහජන සේවා අංශය විසින් එම පිරිසට පාර්ලිමේන්තු ක්රියාවලිය පිළිබඳව අවශ්ය දැනුවත්කිරීම් සිදුකරන ලදී.
පසුව මෙම පිරිස, ආබාධ සහිත තැනැත්තන් සඳහා වන පාර්ලිමේන්තු සංසදයේ සභාපති පාර්ලිමේන්තු මන්ත්රී ගරු ඩලස් අලහප්පෙරුම මහතා හමුවී සුහද සාකච්ජාවක නිරතවූහ. එහිදී එම පිරිස තම ප්රජාවට මුහුණ දීමට සිදුවන ගැටලු හා අභියෝග පිළිබඳ කරුණු ඉදිරිපත් කළහ. එම පිරිස සිහිපත් කළේ ඔවුන්ට අවශ්ය වන්නේ සමාජයතුළ විශේෂ අවස්ථා නොව සම අවස්ථා බවයි.
වර්තමානය වන විට ආබාධ සහිත ප්රජාවට අවශ්ය දේ සැපිරීම හා සම අවස්ථා ලබාදීම වෙනුවෙන් සමාජ තුළ කවරදාටත් වඩා කතිකාවත් නිර්මාණය වීම සුභදායක බව මෙහිදී කරුණු දක්වමින් පාර්ලිමේන්තු මන්ත්රී ගරු ඩලස් අලහප්පෙරුම මහතා පැවසීය.
මේ අවස්ථාව සඳහා ආබාධ සහිත තැනැත්තන් සඳහා වන පාර්ලිමේන්තු සංසදයේ නියෝජ්ය සම සභාපති පාර්ලිමේන්තු මන්ත්රී මන්ත්රී ගරු (නීතිඥ) මධුර විතානගේ, පාර්ලිමේන්තු මන්ත්රී ගරු ජයන්ත සමරවීර හා මැතිවරණ කොමිසමේ කොමසාරිස් ජනරාල් සමන් ශ්රී රත්නායක යන මහත්වරුන් මෙන්ම ආබාධ සහිත පුද්ගල සංවිධාන ඒකාබද්ද පෙරමුණේමේ සාමාජිකන් පිරිසක් සහභාගී වී සිටියහ.
නිරීක්ෂණ චාරිකාවෙන් අනතුරුව එම පිරිස සමූහ ජායාරූපයකට පෙනී සිටි අතර මේ අවස්ථාව සඳහා ගරු අග්රාමත්ය දිනේෂ් ගුණවර්ධන මහතාද සහභාගී සහභාගී විය.
அங்கவீனமுற்றோரின் பாராளுமன்ற சுற்றுப்பயணம்
அங்கவீனமுற்றோரின் அமைப்புக்களின் ஒன்றிணைந்த முன்னணியின் நாடளாவிய ரீதியில் உள்ள செவிப்புலன், பார்வை மற்றும் உடலியல் ரீதியாக அங்கவீனமானவர்கள் சிலர் இன்று (17) பாராளுமன்றத்தைப் பார்வையிடும் சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டனர்.
பாராளுமன்ற நடைமுறை தொடர்பில் புரிதலை பெற்றுக்கொள்வதற்கு மற்றும் மக்கள் பிரதிநிதிகளை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க இது ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின், பொதுமக்கள் வெளித்தொடர்பு பிரிவினால் அவர்களுக்கு பாராளுமன்ற முறைமை தொடர்பான தெளிவுபடுத்தல் வழங்கப்பட்டது.
அதனையடுத்து இவர்கள், அங்கவீனர்கள் தொடர்பான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டலஸ் அழகப்பெருமவைச் சந்தித்து சிநேகபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன்போது, தமது சமூகத்தினர் முகங்கொடுக்கும் சிக்கல்கள் மற்றும் சவால்கள் தொடர்பில் அவர்கள் விடயங்களை முன்வைத்தனர். தமக்கு சமூகத்தில் விசேட வாய்ப்புகள் அன்றி, சம வாய்ப்புகளே வழங்கப்பட வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டினர்.
தற்பொழுது அங்கவீனமுற்றவர்களுக்குத் தேவையானவற்றை வழங்குதல் மற்றும் சம வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பில் சமூகத்தில் என்றுமில்லாத வகையில் கலந்துரையாடல் உருவாகியுள்ளமை சாதகமான விடயம் என பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இதன்போது அங்கவீனர்கள் தொடர்பான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைப் பிரதித் தலைவர் கௌரவ (சட்டத்தரணி) மதுர விதானகே, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜயந்த சமரவீர மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஆகியோரும் அங்கவீனமுற்றோரின் அமைப்புக்களின் ஒன்றிணைந்த முன்னணியின் அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்தைப் பார்வையிட்டதை அடுத்து அவர்கள் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், இதன்போது பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தனவும் இணைந்துகொண்டார்.