The Women Parliamentarians’ Caucus has issued a statement condemning the inhuman series of gang-rape of a 16-year-old girl Child in Thanamalwila since 2023 and the verbal and emotional harassment by the Medical Officer as alleged by the mother of the victim.
The Women Parliamentarians’ Caucus Chair Hon. (Dr.) (Mrs.) Sudarshini Fernandopulle, in her statement highlights that the brutal violation of the affected girl shows how all responsible authorities of Sri Lanka, have failed in their duties and request that the in the aftermath of this profound injustice, to act in a conscientious, responsible and accountable manner.
The Women Parliamentarians’ Caucus states that such gross violations of women’s and children’s rights are unacceptable and must not be tolerated. The Caucus further establishes that all necessary measures to prevent such incidents and safeguard the rights and dignity of every girl child in Sri Lanka must be ensure
තණමල්විල ප්රදේශයේ බාලවයස්කාර දැරියක් සමූහ දූෂණයකට ලක්වීමේ සිද්ධිය සහ හම්බන්තොට අධිකරණ වෛද්ය නිලධාරියාගේ ක්රියාකලාපය පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදය හෙළා දකියි.
තණමල්විල ප්රදේශයේ 2023 වසරේ සිට 16 හැවිරිදි දැරියක් සමූහ දූෂණයට ලක් කිරීමේ අමානුෂික සිදුවීම් මාලාව සහ වින්දිතයාගේ මව විසින් චෝදනා කරන පරිදි අදාළ අධිකරණ වෛද්ය නිලධාරියා විසින් වින්දිත දැරියට වාචික හා මානසික හිරිහැර කිරීම දැඩි ලෙස හෙළා දකිමින් පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදය නිවේදනයක් නිකුත් කර තිබේ.
පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදයේ සභාපති ගරු. (වෛද්ය) සුදර්ශිනී ප්රනාන්දුපුල්ලේ මහත්මිය සිය නිවේදනය මගින් පෙන්වා දෙන්නේ මෙම දැරියට මුහුණදීමට සිදුවූ අමානුෂික සිදුවීම් මාලාව තුළින් මීට අදාළ වගකිවයුතු බලධාරීන් තම රාජකාරිය නිසිපරිදි ඉටුකිරීම පැහැර හැර ඇති ආකාරය පෙන්නුම් කරන බවයි. ඒ අනුව මෙවැනි අනීතික සිදුවීම්වලදී හෘද සාක්ෂියට එකඟව, වගකීමෙන් හා වගවීමෙන් කටයුතු කිරීමේ අවශ්යතාව ඇය අවධාරණය කර සිටියි.
කාන්තා සහ ළමා අයිතිවාසිකම් මෙලෙස උල්ලංඝනය කිරීම් කිසිසේත්ම පිළිගත නොහැකි බවත් ඒ සඳහා කිසිදු ඉඩක් නොතැබිය යුතු බවත් පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදය වැඩිදුරටත් පෙන්වා දෙයි. එවැනි සිදුවීම් වැළැක්වීමට සහ ශ්රී ලංකාවේ සෑම ගැහැණු දරුවකුගේම අයිතිවාසිකම් සහ ගෞරවය ආරක්ෂා කිරීමට අවශ්ය සියලු පියවරයන් තහවුරු කිරීම සදහා ඉදිරියටත් පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදය පෙනී සිටින බවත් මෙම නිවේදනය මගින් වැඩිදුරටත් පෙන්වා දෙයි.
தனமன்வில பகுதியில் சிறுமியொருவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டமை மற்றும் ஹம்பாந்தோட்டை சட்ட மருத்துவ அதிகாரியின் செயற்பாட்டுக்கு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் கண்டனம்
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம், தனமன்வில பகுதியில் 2023ஆம் ஆண்டு முதல் 16 வயதுடைய சிறுமி ஒருவர் மனிதாபிமானமற்ற முறையில் தொடர்ச்சியாக கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டமை மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயுடைய குற்றச்சாட்டுக்கு அமைய சட்ட மருத்துவ அதிகாரியினால் வய்மூலமாகவும், உளரீதியாகவும் துன்புறுத்தப்பட்டமையைக் கண்டித்துள்ளது.
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த சிறுமிக்கு முகங்கொடுக்க நேர்ந்த மோசமான தொடர் சம்பவங்களின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் தமது கடமையைச் சரியாகச் செய்யவில்லையென்பது புலனாவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற சம்பங்கள் இடம்பெறாது தவிர்ப்பதும், இலங்கையிலுள்ள அனைத்து பெண் பிள்ளைகளினதும் உரிமை மற்றும் கௌரவம் பாதுகாக்கப்படுவதும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுபோன்ற பெண்கள் மற்றும் சிறுவர் உரிமை மீறல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், அவை தொடர்ந்தும் நடப்பதை அனுமதிக்க முடியாதென்றும் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கும் இலங்கையிலுள்ள ஒவ்வொரு பெண் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கௌரவத்தைப் பாதுகாப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியம் தொடர்ந்தும் மேற்கொள்ளும் என இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.