Women Parliamentarians’ Caucus of Sri Lanka who are on a study visit to New Zealand, met the former Prime Ministers of New Zealand, Jacinda Ardern and Helen Clark, on July 27th.
Empowering women leadership in politics and promoting gender diversity were discussed at length with the Prime Ministers. Jacinda Ardern, who held the position of Prime Minister of New Zealand from 2017 to 2023, shared her experience of leading her country in the face of the economic and political crises as well as the Covid-19 pandemic during her tenure. Especially the attention of women Parliamentarians was drawn to matters such as the policies created to provide opportunities for women who gave up work to take care of children to enter the job market again, measures taken to create wage equality, paid parental leave in case of childbirth, reducing child poverty etc.
Also, Helen Clark, the first female Prime Minister of New Zealand, spoke about her political experience to the Caucus. She expressed her views on the measures taken during her tenure to empower women, including civil marriage reforms and encouraging women to save money for retirement.
A cultural event was also organized here representing the ‘Maori’ community in New Zealand to welcome the Sri Lankan Women Parliamentarians’ Caucus.
Hon. Dr. Sudarshini Fernandopulle, Hon. Sitha Arambepola, Hon. Rohini Kumari Wijeratne, Hon. Pavithradevi Vanniarachchi, Hon. Geetha Samanmalee Kumarasinghe, Hon. Thalatha Athukorala, Hon. Kokila Gunawardena, Hon. Mudita Prishanthi, Hon. Rajika Wickramasinghe, Hon. Manjula Dissanayake, Hon. (Dr.) Harini Amarasuriya as well as the Secretary General of Parliament Kushani Rohanadeera, Assistant Director (Administration) Indira Dissanayake and Media Manager of Parliament Nimmi Hathiyaldeniya were present on this occasion.
This study visit was organized by the National Democratic Institute (NDI) with the support of the United States Agency for International Development (USAID), with the aim of strengthening the measures taken by the Women Parliamentarians’ Caucus for the advancement of Sri Lankan women, including the empowerment of women’s leadership in the country’s politics and securing gender equality.
මන්ත්රීවරියන්ගේ සංසදය නවසීලන්තයේ හිටපු අගමැතිවරියන් වන ජසින්ඩා ආර්ඩන් සහ හෙලන් ක්ලාක් හමුවෙයි
නවසීලන්තයේ අධ්යයන සංචාරයක යෙදී සිටින ශ්රි ලංකා පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදය නවසීලන්තයේ හිටපු අගමැතිවරියන් වන ජසින්ඩා ආර්ඩන් සහ හෙලන් ක්ලාක් යන මහත්මීහු පසුගියදා (27) හමු විය.
දේශපාලනය තුළ කාන්තා නායකත්වය සවිබලගැන්වීම, ස්ත්රී පුරුෂ සමාජභාවීය බහුවිධභාවය නගාසිටුවීම පිළිබඳ මෙහිදි දිර්ඝ වශයෙන් අග්රාමාත්යවරියන් සමග සාකච්ඡා කෙරිණි. 2017 සිට 2023 දක්වා නවසීලන්තයේ අග්රාමාත්ය ධූරය හෙබවූ ජසින්ඩා ආර්ඩන් මහත්මිය සිය පාලන කාලය තුළ ආර්ථික දේශපාලන අර්බුද මෙන්ම කොවිඩ් 19 වසංගත තත්ත්වය හමුවේ සිය රටට නායකත්වය ලබා දීම පිළිබද සිය අත්දැකීම් මන්ත්රිවරියන් සමග බෙදා ගත්තාය. විශේෂයෙන් ඇගේ පාලන කාලය තුළ දරුවන් රැක බලා ගැනීමට රැකියාව අත් හල කාන්තාවන්ට නැවත රැකියා වෙළදපොලට පිවිසීම සදහා අවකාශ සැලසීම පිළිබද ඇති කරන ලද ප්රතිපත්ති, වැටුප් සමානතාවය ඇති කිරීම සදහා ගන්නා ලද ක්රියාමාර්ග, දරු උපතකදී වැටුප් සහිත මව්පිය නිවාඩු ලබාදිම, ළමා දරිද්රතාවය අවම කිරීම මෙන්ම රටතුළ මෙන්ම දේශපාලනය තුළදීද ස්ත්රී පුරුෂ සමාජ භාවයන්ට හසු නොවන අනෙකුත් ප්රජාවගේ අයිතීන් සුරක්ෂිත කිරීම ආදී කරුණු පිළිබද මෙහිදී මන්ත්රීවරියන්ගේ අවධානය යොමු විය.
එමෙන්ම නවසීලන්තයේ පළමු කාන්තා අග්රාමාත්යවරිය වන හෙලන් ක්ලාක් මහත්මියද ශ්රී ලංකා පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදය වෙත සිය දේශපාලන අත්දැකීම් පිළිබද අදහස් දැක්වූ අතර, විශේෂයෙන් කාන්තාවන් සවිබල ගැන්වීම සදහා සිය ධුර කාලය තුළ ගන්නා ලද ක්රියාමාර්ග මෙන්ම විශ්රාම දිවිය වෙනුවෙන් ඉතිරි කිරීම සදහා කාන්තාවන් දිරිමත් කිරීම සහ සිවිල් විවාහ ප්රතිසංස්කරණ පිළිබදවද සිය අදහස් ඉදිිපත් කළාය.
ශ්රී ලංකා පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදය පිළිගැනීම සදහා නවසීලන්තයේ මාඕරි (Maori) ප්රජාව නියෝජනය කරමින් සංස්කෘතිකාංගයක්ද මෙහිදී සංවිධානය කොට තිබිණි.
ගරු සුදර්ශිනී ප්රනාන්දුපුල්ලේ, ගරු සීතා අරඹේපොල, ගරු රෝහිණි කුමාරි විජේරත්න, ගරු (නීතිඥ) පවිත්රාදේවී වන්නිආරච්චි, ගරු ගීතා සමන්මලී කුමාරසිංහ, ගරු (නීතිඥ) තලතා අතුකෝරල, ගරු කෝකිලා ගුණවර්ධන, ගරු මුදිතා ප්රිශාන්ති, ගරු රාජිකා වික්රමසිංහ, ගරු මංජුලා දිසානායක, ගරු (ආචාර්ය) හරිනි අමරසූරිය මෙන්ම පාර්ලිමේන්තුවේ මහ ලේකම් කුෂානි රෝහණදීර, සහකාර අධ්යක්ෂ (පරිපාලන) ඉන්දිරා දිසානායක සහ පාර්ලිමේන්තුවේ මාධ්ය කළමණාකාරිනි නිම්මි හාතියල්දෙනිය ඇතුළු පිරිසක් මෙම අවස්ථාවට සහභාගී වූහ.
මෙරට දේශපාලනය තුළ කාන්තා නායකත්වය සවිබලගැන්වීම, ස්ත්රී පුරුෂ සමානාත්මතාවය සුරක්ෂිත කිරීම මෙන්ම ශ්රී ලාංකීය කාන්තා අභිවෘද්ධිය වෙනුවෙන් පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදය විසින් ගනු ලබන ක්රියාමාර්ග වඩාත් ශක්තිමත් කිරීම අරමුණු කොට ගෙන මෙම අධ්යයන සංචාරය ජාත්යන්තර සංවර්ධනය සඳහා වූ එක්සත් ජනපද නියෝජිතායතනයේ (USAID) පූර්ණ අනුග්රහය සහිතව ජාතික ප්රජාතන්ත්රවාදී ආයතනය (NDI) විසින් සංවිධානය කෙරිණි.
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் நியூசிலாந்து முன்னாள் பிரதமர்களான ஜசிந்தா ஆடர்ன் மற்றும் ஹெலன் கிளார்க் ஆகியோருடன் சந்திப்பு
நியூசிலாந்துக்கு ஆய்வுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைப் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் நியூசிலாந்து முன்னாள் பிரதமர்களான ஜசிந்தா ஆடர்ன் மற்றும் ஹெலன் கிளார்க் ஆகியோரை அண்மையில் (27) சந்தித்தது.
இந்தச் சந்திப்பில் அரசியலில் பெண்களின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துதல், பாலின சமத்துவ ரீதியான பல்வகைத் தன்மையைக் கட்டியெழுப்புதல் தொடர்பில் முன்னாள் பிரதமர்களுடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. 2017 முதல் 2023 வரை நியூசிலாந்தில் பிரதமர் பதவியை வகித்த ஜசிந்தா ஆடர்ன் தனது பதவி காலத்தில் பொருளாதார, அரசியல் நெருக்கடிகள் போன்று கொவிட் 19 தொற்று நோய் நிலைமையில் தமது நாட்டுக்கு தலைமை வகித்த அனுபவங்களைப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டார். விசேடமாக அவரது காலப்பகுதியில் குழந்தைகளைப் பார்ப்பதற்காக தொழிலை விட்டுச்சென்ற பெண்கள் மீண்டும் தொழிற்சந்தைக்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட கொள்கை, சமமான சம்பளத்தை உருவாக்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், குழந்தைப் பிறப்பின் போது பெற்றோருக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்குதல், குழந்தை வறுமைத் தன்மையை குறைத்தல் போன்ற நாட்டிலும் அரசியலிலும் பாலின சமத்துவத்துக்குள் உள்வாங்கப்படாத ஏனையவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது உள்ளிட்ட விடயங்கள் இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன.
அத்துடன் நியூசிலாந்தின் முதலாவது பெண் பிரதமரான ஹெலன் கிளார்க் இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்திடம் தமது அரசியல் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதுடன், விசேடமாகப் பெண்களை வலுப்படுத்துவதற்காகத் தனது பதவிக் காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஓய்வூதிய காலத்துக்காக சேமிப்பதற்காகப் பெண்களை ஊக்கப்படுத்துதல் மற்றும் சிவில் விவாக சீர்திருத்தங்கள் தொடர்பான தமது கருத்துக்களை முன்வைத்தார்.
இலங்கைப் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தை வரவேற்பதற்காக நியூசிலாந்தின் மாஓரி (Maori) சமூகத்தினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலாச்சார நிகழ்வொன்றும் இதன் போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஒன்றியத்தின் உறுப்பினர்களான கௌரவ சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, கௌரவ சீதா அரம்பேபொல, கௌரவ ரோஹினீ குமாரி விஜேரத்ன, கௌரவ சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, கௌரவ கீதா சமன்மலீ குமாரசிங்ஹ, கௌரவ சட்டத்தரணி தலதா அதுகோரல, கௌரவ கோகிலா குணவர்தன, கௌரவ முதிதா பிரிஸான்தி, கௌரவ ராஜிகா விக்கிரமசிங்ஹ, கௌரவ மஞ்சுலா திசாநாயக, கௌரவ (கலாநிதி) ஹரினி அமரசூரிய ஆகியோரும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) இந்திரா திசாநாயக, பாராளுமன்ற ஊடக முகாமையாளர் நிம்மி ஹாத்தியல்தெனிய உள்ளிட்டோரும் இதன் போது கலந்து கொண்டனர்.
நாட்டின் அரசியலில் பெண்களின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துதல், பாலின சமத்துவத்தை பாதுகாத்தல் உள்ளிட்ட இலங்கைப் பெண்களின் முன்னேற்றத்திற்காக பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஆய்வுப் பயணம் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனத்தின் (USAID) முழுமையான அனுசரணையில் தேசிய ஜனநாயக நிறுவனத்தினால் (NDI) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.