- Unveils a special photo wall with photographs of all women MPs from 1931 to date.
- The official logo of the Women Parliamentarians Caucus launched.
Former female Parliamentarians were felicitated during a special felicitation Programme organized by Women Parliamentarians’ Caucus, held today (07) in Parliament in line with the International Women’s Day 2024.
The event was held under the patronage of Speaker Hon. Mahinda Yapa Abeywardena and several dignitaries including Prime Minister Hon. Dinesh Gunawardena, Leader of the Opposition Hon. Sajith Premadasa, Chair of the Women Parliamentarians’ Caucus Hon. (Dr.) Sudarshini Fernandopulle, Acting Secretary General of Parliament Mr. Chaminda Kularatne participated in this event.
The program was organized under the theme “Equity and equality for her”.
At the outset of the programme one minute silence was observed in memory of all the former female MPs who are no longer alive. After that, the official badge of the Women Parliamentarians’ Caucus was launched and the members of the caucus explained the meaning of the official badge.
After that, former and present female Members of Parliament were felicitated including late Hon. Sirima R. D Bandaranaike, the first female Prime Minister of the world, and the first female President of Sri Lanka, Hon. Chandrika Bandaranaike Kumaratunga. The official badge of the Women Parliamentarians’ Caucus was pinned and the official membership card of the caucus was also presented to the former female Parliamentarians who were present in the event.
Following the programme, a special photo wall created in the Parliament complex, with the photographs of all the women MPs since 1931, was unveiled by the Speaker Hon. Mahinda Yapa Abeywardena.
The programme was organized with the support and cooperation of the United States Agency for International Development (USAID) and the National Democratic Institute (NDI) and Members of Parliament, relatives of former female Members of Parliament, and parliamentary staff members were present on this occasion.
කාන්තා දිනය වෙනුවෙන් පැරණි මන්ත්රීවරියන්ට පාර්ලිමේන්තුවේදී බුහුමන්
- 1931 සිට මේ දක්වා සියලුම මන්ත්රීවරියන්ගේ ඡායාරූප සහිත විශේෂ පුවරුවක් නිරාවරණය කරයි..
- පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදයේ නිල ලාංජනය එළිදක්වයි..
ජාත්යන්තර කාන්තා දිනයට සමගාමීව පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදය විසින් සංවිධනය කළ, මෙරට පාර්ලිමේන්තුව නියෝජනය කළ සියලුම මන්ත්රීවරියන් අගයමින් විශේෂ සැමරුම් වැඩසටහනක් අද (07) පාර්ලිමේන්තුවේදී පැවැත්විණි. ඒ ගරු කථානායක මහින්ද යාපා අබේවර්ධන මහතාගේ ප්රධානත්වයෙන්.
මේ අවස්ථාව සඳහා ගරු අග්රාමත්ය දිනේෂ් ගුණවර්ධන, විපක්ෂ නායක සජිත් ප්රේමදාස, පාර්ලිමේන්තුවේ වැඩබලන මහලේකම් චමින්ද කුලරත්න, පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදයේ සභාපති ගරු (වෛද්ය) සුදර්ශිනී ප්රනාන්දුපුල්ලේ, යන මහත්ම මහත්මීන් සහභාගී වූහ.
“ ඇය වෙනුවෙන් සමතාවය සහ සමානාත්මතාවය” යන්න තේමා කරගනිමින් මෙම වැඩසටහන සංවිධානය කර තිබිණි.
වැඩසටහන ආරම්භ කරමින් පාර්ලිමේන්තුව නියයෝජනය කළ, දැනට ජිවතුන් අතර නොමැති සියලුම මන්ත්රීවරුන් සිහිකරමින් විනාඩියක නිහඬතාවක් ආරක්ෂා කරන ලදී. පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදයේ නිල ලාංජනය එළිදැක්වීම ඉන් අනතුරුව සිදුවූ අතර එම සංසදයේ සාමාජික මන්ත්රීවරියන් විසින් නිල ලාංජනයෙන් අර්ථවත් වන කරුණු සම්බන්දයෙන් පැහැදිලි කරන ලදී.
ඉන් අනතුරුව හිටපු සහ වර්තමාන පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ට උපහාර පිරිනැමීම සිදුවුනි. එහිදී ලොව ප්රථම අග්රාමාත්යවරිය වූ දිවංගත ගරු සිරිමා ආර්.ඩි බණ්ඩාරනායක මහත්මිය සහ මෙරට ප්රථම ජනාධිපතිවරිය වූ ගරු චන්ද්රිකා බණ්ඩාරනායක කුමාරතුංග මහත්මිය ගෞරවයෙන් සිහිපත් කර උපහාර පුදකරන ලදී. අනතුරුව සියලුම මන්ත්රීවරියන් සඳහා පාර්ලිමේන්තු මන්ත්රී වරියන්ගේ සංසදයේ නිල ලාංජනය පැළඳ වූ අතර ඔවුන් සඳහා සංසදයේ නිල සමාජිකත්ව කාඩ්පත පිරිනැමීමද සිදුවිය.
ඉන් පසුව පාර්ලිමේන්තු සංකීර්ණයේ නිර්මාණ කළ ,1931 වසරේ සිට මේ දක්වා සියලුම මන්ත්රීවරියන්ගේ ඡායාරූප සහිත විශේෂ පුවරුව කථානායක වරයාගේ විසින් නිරාවරණය කරන ලදී.
ජාත්යන්තර සංවර්ධනය සඳහා වූ එක්සත් ජනපද නියෝජිතායතනය (USAID) සහ ජාතික ප්රජාතන්ත්රවාදී ආයතනයේ (NDI ) අනුග්රහයයෙන් සහ සහයෝගයෙන් සංවිධානය කල මෙම වැඩසටහන සඳහා ගරු පාර්ලිමේන්තු මන්ත්රීවරයන් ,පාර්ලිමේන්තුව නියෝජනය කළ මන්ත්රීවරියන්ගේ ඥාතීන්, පාර්ලිමේන්තු කාර්යමණ්ඩල නිලධාරීන් ඇතුළු පිරිසක් සහභාගී වුහ.
மகளிர் தினத்தை முன்னிட்டு முன்னாள் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்தில் கௌரவம்
- 1931 முதல் இன்று வரையுள்ள அனைத்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் புகைப்படங்கள் அடங்கிய பதாகை திரைநீக்கம்
- பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ இலச்சினை வெளியீடு
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கைப் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கௌரவிக்கும் வகையில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (07) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவர் கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
‘அவளுக்கான சமத்துவம் மற்றும் ஒப்புரவு’ என்ற தொனிப்பொருளில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வின் ஆரம்பத்தில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி மறைந்த அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ இலச்சினை அறிமுகப்படுத்தப்பட்டதுடன், இந்த இலச்சினையின் அர்த்தத்தை ஒன்றியத்தின் உறுப்பினர்கள் விளக்கினர்.
அத்துடன், முன்னாள் மற்றும் தற்போதைய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கௌரவம் அளிக்கப்பட்டது. உலகின் முதலாவது பெண் பிரதமரான மறைந்த கௌரவ சிறிமாவோ பண்டாரநாயக மற்றும் இந்நாட்டின் முதலாவது பெண் ஜனாதிபதி கௌரவ சந்திரிகா குமாரதுங்க ஆகியோருக்கு கௌரவம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சகல பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ சின்னம் அணிவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ அங்கத்துவ அட்டையும் கையளிக்கப்பட்டது.
அதன்பின், 1931ம் ஆண்டு முதல் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்துப் பெண் உறுப்பினர்களினதும் புகைப்படங்களைத் தாங்கியதாக பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பதாகை சபாநாயகரினால் திரைநீக்கம் செய்யப்பட்டது.
சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரமைப்பு (USAID) மற்றும் தேசிய ஜனநாயக நிறுவனம் (NDI) ஆகியவற்றின் அனுசரணை மற்றும் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்களின் குடும்பத்தினர், பாராளுமன்றப் பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.