The Women Parliamentarians’ Caucus (WPC) has submitted proposals to amend the anti-corruption bill to be debated and passed in Parliament tomorrow (21).
Addressing a letter to the Speaker on behalf of the Women Parliamentarians’ Caucus and the Sectoral Oversight Committee on Children, Women and Gender, the chairperson of the Caucus, Hon. Dr. Sudarshini Fernandopulle, has stated that the Women Parliamentarians’ Caucus is very happy to see the inclusion of the concept of sexual bribery being addressed in the draft of the present Anti-Corruption Bill.
However, Dr. Fernandopulle informs that two priority concerns have been identified that require amendment immediately before debate schedule on 21 June 2023.
The first is that there should be a change in the offense of ‘sexual favour’. The Caucus requests that the term sexual favour diminishes the offence and therefore, instead, the term ‘sexual bribery’ be substituted as it ensures that the gravity of the offence is reflected in the law.
Dr. Fernandopulle points out that the second is that due to the Section 162 sub-section (f) re corruption – the draft bill reflects that the offence is committed by both the giver and the taker of any bribe and the person giving the bribe may be treated unfairly.
Thus, the Caucus informs the speaker that they also request to include an exception in the case of sexual bribery only, where the giver/offeror of the bribe is not considered the guilty party.
දූෂණ විරෝධී පනත් කෙටුම්පතට පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදයෙන් සංශෝධන යෝජනා
හෙට (21) පාර්ලිමේන්ත්වේදී විවාද කොට සම්මත කිරීමට නියමිත දූෂණ විරෝධී පනත් කෙටුම්පත සඳහා පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදය විසින් සංශෝධන යෝජනා ඉදිරිපත් කොට තිබේ.
පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදය සහ ස්ත්රීපුරුශ සමාජභාවය පිලිබද ආංශික අධීක්ෂණ කාරක සභාව වෙනුවෙන් කථානායකවරයා වෙත ලිපියක් යොමු කරමින් සංසදයේ සභාපති පාර්ලිමේන්තු මන්ත්රී ගරු සුදර්ශිනී ප්රනාන්දුපුල්ලේ මහත්මිය දක්වා ඇත්තේ ලිංගික අල්ලස් පිළිබඳ සංකල්පය දූෂණ විරෝධී පනත් කෙටුම්පතට ඇතුළත් කිරීම ගැන පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදය ඉතා සතුටු වන බවයි.
කෙසේ වෙතත්, 2023 ජූනි 21 දිනට නියමිත විවාදයට පෙර සංශෝධනය විය යුතුම ප්රමුඛතා දෙකක් හදුනාගෙන ඇති බව ප්රනාන්දුපුල්ලේ මහත්මිය දන්වා සිටී.
ඉන් පළමුවැන්න වන්නේ එහි සඳහන් ‘ලිංගික අනුග්රහය’ යන වරදෙහි වෙනසක් විය යුතු බවයි. “අනුග්රහය” යන්නෙන් වරද සුලු කරනු ලබන බවත් එබැවින් ඒ වෙනුවට, ‘ලිංගික අල්ලස්’ යන යෙදුම තුලින් ක්රියාවේ/වරදෙහි බරපතලකම මැනවින් දක්වන බැවින් එම යෙදුම ආදේශ කරන ලෙස සංසදය ඉල්ලා සිටී.
දෙවැන්න නම් පනත් කෙටුම්පතෙහි සඳහන් “අල්ලසක් සම්බන්ධයෙන්, අල්ලසක් දෙන පුද්ගලයාට එරෙහිව නීතිමය ක්රියාමාර්ග ගත හැක” යන්න අදහස් වන වගන්තිය හේතුකොට ගෙන “ලිංගික අල්ලස” නැමැත්තෙහි ගැබ්වී ඇති ස්ත්රී පුරුෂ සමාජභාවය හේතුවෙන්, ලිංගික අල්ලසක් සම්බන්ධයෙන්, අල්ලසක් දෙන පුද්ගලයාට අසාධාරණයක් විය හැකි බව ප්රනාන්දුපුල්ලේ මහත්මිය පෙන්වා දෙයි.
එනිසා ලිංගික අල්ලසක් දෙන පුද්ගලයාට එරෙහිව නීතිමය ක්රියාමාර්ග ගැනීම වලක්වමින් ව්යතිරේකයක් ඇතුළත් කරන ලෙසද ඉල්ලා සිටින බව මන්ත්රීවරියන්ගේ සංසදය කථානයකවරයාට දන්වා සිටී.
ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்துக்கு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் திருத்தங்கள் முன்மொழிவு
நாளை (21) பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படவுள்ள ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்துக்கு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு சார்பில் பாலியல் இலஞ்சம் தொடர்பான எண்ணக்கரு ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ளமை தொடர்பில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் மகிழ்ச்சியடைவதாக ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்திய கலாநிதி) சுதர்ஷினி பர்னாந்துபுல்லே சபாநாயகருக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
எனினும், 2023 ஜூன் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள விவாதத்துக்கு முன்னர் மறுசீரமைக்கப்பட வேண்டிய இரண்டு முன்னுரிமைகள் இனங்காணப்பட்டுள்ளதாக சுதர்ஷினி பர்னாந்துபுல்லே அறிவித்துள்ளார்.
அதில் முதலாவதாக, சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “பாலியல் நாட்டம்” எனும் குற்றத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும், “நாட்டம்” என்பதன் மூலம் குற்றம் சிறிதாக்கப்படுவதாகவும் அதனால், அதற்குப் பதிலாக “பாலியல் இலஞ்சம்” எனும் பதம் மூலம் செயற்பாட்டின்/குற்றத்தின் தீவிரத்தன்மை சிறந்த முறையில் காட்டப்படுவதால் அந்தப் பதத்தை பயன்படுத்துமாறும் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
இரண்டாவதாக, சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “இலஞ்சம் சம்பந்தமாக, இலஞ்சம் வழங்கும் நபர் ஒருவருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியும்” எனும் கருத்தைக் கொண்ட பிரிவைக் காரணமாகக் கொண்டு “பாலியல் இலஞ்சம்” என்பதில் உள்ள பாலினம் காரணமாக, பாலியல் இலஞ்சம் தொடர்பில், இலஞ்சம் வழங்கும் நபருக்கு அநியாயம் இழைக்கப்படக்கூடும் என சுதர்ஷினி பர்னாந்துபுல்லே சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனால் பாலியல் இலஞ்சம் வழங்கும் நபர் ஒருவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் வகையில் விதிவிலக்கொன்றை உள்வாங்குமாறு கோரிக்கை விடுப்பதாக பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் சபாநாயகருக்கு அறிவித்துள்ளது.