- Media reporting should move beyond sensationalized narratives and focus on the lived realities of women subjected to violence – Prime Minister Hon. (Dr.) Harini Amarasuriya
- If you know of any violence against women and children, make a complaint via the 1938 hotline – Chair of the Women Parliamentarians’ Caucus and Minister of Women and Child Affairs, Hon. Saroja Paulraj
- A wristband with the message “End Gender Based Violence” presented to all Members of Parliament
A number of activities were held in Parliament yesterday (06) under the leadership of the Women Parliamentarians’ Caucus in support of the Sixteen Days of activism against Gender Based Violence (GBV). Women Parliamentarians and the staff of the Secretary General were dressed in orange to support the programme.
Accordingly, a wristband with the message “End Gender Based Violence” was presented to the Speaker Hon. (Dr.) Asoka Ranwala by the Deputy Chairpersons of Committees Member of Parliament Hon. Hemali Weerasekara along with the other members of the Caucus. The wristband was also presented to Hon. Sajith Premadasa, the Leader of the Opposition and Gayantha Karunathilleka, the Chief Opposition Whip. Secretary General of the Parliament Mrs. Kushani Rohanadeera was also present on the occasion.
Subsequently, the wristbands were presented to Prime Minister Hon. (Dr.) Harini Amarasuriya, Leader of the House, Minister Hon. Bimal Rathnayake, Chief Government Whip, Minister Hon. Dr Nalinda Jayatissa, and the Deputy Speaker (Dr.) Rizvie Salih. Furthermore, all Members of Parliament were given the wristbands alongside a public pledge End gender-based violence and promote gender equality.
During the media briefing held thereafter, representing the Women Parliamentarians’ Caucus Hon. (Dr.) Harini Amarasuriya emphasized the need for media reporting to move beyond sensationalized narratives and focus on the lived realities of women subjected to violence. She noted that violence against women and children often originates not from strangers but from those closest to them.
Chair of the Women Parliamentarians’ Caucus and Minister of Women and Child Affairs, Hon. Saroja Paulraj, highlighted the availability of the 1938 hotline for reporting violence against women and children assuring prompt action on such complaints. She also underscored the government’s stringent approach to addressing cybercrimes against women.
Hon. Saroja Paulraj further remarked that the Women Parliamentarians’ Caucus operates as a model within Parliament and the responsibility it bears in safeguarding the dignity and respect within parliament determining how it will be the stepping stone for how all Sri Lankan women and children are being given dignity and respect as a whole. Emphasizing the significance of Parliament being the cornerstone of legislative authority, she reiterated that Parliament must lead by example in ensuring justice and equality for all citizens.
ස්ත්රී පුරුෂ සමාජභාවය මත පදනම් වූ ප්රචණ්ඩත්වය පිටුදැකීමට පාර්ලිමේන්තුව තැඹිලි පැහැ ගැන්වෙයි.
- ප්රචණ්ඩත්වයට ලක්වන කාන්තවන් සම්බන්ධයෙන් මාධ්ය වාර්තා කිරීමේදී විශේෂ සැලකිල්ලක් දැකිවිය යුතුයි. – අග්රාමාත්ය ගරු (ආචාර්ය) හරිනි අමරසූරිය මැතිනිය.
- කාන්තවන්ට, දරුවන්ට සිදුවන යම් ප්රචණ්ඩත්වයක් සම්බන්ධයෙන් දැනුවත් නම් 1938 අංකයට පැමිණිලි කරන්න – පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදයේ සභාපති, අමාත්ය ගරු සරෝජා සාවිත්රි පෝල්රාජ් මහත්මිය.
- සහයෝගය දැක්වීමක් ලෙස මන්ත්රීවරයන්ට “ස්ත්රී පුරුෂ සමාජභාවය මත පදනම් වූ ප්රචණ්ඩත්වය අවසන් කරනු” යන වැකිය සහිත අත් පළඳනාවක්
ස්ත්රී පුරුෂ සමාජභාවය මත පදනම් වූ ප්රචණ්ඩත්වයට (GBV) එරෙහිව දින දහසයක ගෝලිය ක්රියාකාරීත්වයට සහය දැක්වීම පිණිස පාර්ලිමේන්තුවේ මන්ත්රීවරියන්ගේ සංසදයේ ප්රධානත්වයෙන් ක්රියාකාරකම් රැසක් පාර්ලිමේන්තුවේදී ඊයේ (06) පැවැත්විණි. මෙම වැඩසටහනට සහයෝගය දැක්වීම පිණිස පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන් සහ කාර්ය මණ්ඩලයේ නිලධාරිනියන් තැඹිලි වර්ණයෙන් සැරසී සිටියහ.
එහිදී ප්රථමයෙන් “ස්ත්රී පුරුෂ සමාජභාවය මත පදනම් වූ ප්රචණ්ඩත්වය අවසන් කරනු” යන වැකිය සහිත අත් පළඳනාවක් ගරු කතානායක (ආචාර්ය) අසෝක රන්වල මහතා, වෙත පළඳවන ලද්දේ නියෝජ්ය කාරක සභා සභාපති ගරු හේමාලි වීරසේකර මහත්මිය ඇතුළු පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදයේ සාමාජිකාවන් විසිනි. මේ අවස්ථාවට එක් වූ විපක්ෂ නායක ගරු සජිත් ප්රේමදාස මහතා සහ විපක්ෂයේ ප්රධාන සංවිධායක ගරු ගයන්ත කරුණාතිලක යන මහත්වරුන්ටද මෙම අත් පළඳනාව පැළඳවීම මෙහිදී සිදු විය. මේ අවස්ථාවට පාර්ලිමේන්තුවේ මහලේකම් සහ කාන්තා සංසදයේ ලේකම් කුෂානි රෝහණදීර මහත්මියද සහභාගී වූවාය.
“ස්ත්රී පුරුෂ සමාජභාවය මත පදනම් වූ ප්රචණ්ඩත්වය අවසන් කරනු” වැකිය සහිත අත් පළඳනාව අග්රාමාත්ය ගරු (ආචාර්ය) හරිනි අමරසූරිය, සභානායක අමාත්ය ගරු බිමල් රත්නායක, ආණ්ඩු පක්ෂයේ ප්රධාන සංවිධායක අමාත්ය ගරු (වෛද්ය) නලින්ද ජයතිස්ස, නියෝජ්ය කථානායක ගරු (වෛද්ය) රිස්වි සාලි යන මහත්ම මහත්මීන්ට පැළඳවීම ඉන් අනතුරුව සිදු කෙරිණි. තවද, සියලු පාර්ලිමේන්තු මන්ත්රීවරුන්ට මෙම අත් පළඳනාව පැළඳවීම සහ පරිශීලනය සඳහා ස්ත්රී පුරුෂ සමාජභාවය මත පදනම් වූ ප්රචණ්ඩත්වය තුරන් කිරීමට සහ ස්ත්රී පුරුෂ සමාජභාවිය සමානාත්මතාවය ප්රවර්ධනය කිරීම පිණිස වන මහජන ප්රතිඥාව ඇතුළත් පත්රිකාවක්ද පිරිනැමීම මෙහිදී සිදු විය.
අනතුරුව පැවති මාධ්ය හමුවේදී පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදය නියෝජනය කරමින්, ප්රචණ්ඩත්වයට ලක්වන කාන්තවන්ට අදාළ වාර්තා කිරීම් චිත්ර කතා නොව ජිවිත පිළිබඳ කාරණා වන බැවින් ඊට අදාළව සිදු වන මාධ්ය වාර්තාකරණය සම්බන්ධයෙන් අවධානය ලක් කළ යුතු බවට අග්රාමාත්ය ගරු (ආචාර්ය) හරිනි අමරසූරිය මැතිනිය අදහස් දක්වමින් පැවසුවාය. කාන්තවන්ට, දරුවන්ට සිදුවන ප්රචණ්ඩත්වය බොහෝ විට සිදු වන්නේ ආගන්තුක පුද්ගලයන්ගෙන් නොව සමීපතමයන්ගෙන් බවද අග්රාමාත්යවරිය වැඩිදුරත් පැවසිය.
පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදයේ සභාපති සහ කාන්තා හා ළමා කටයුතු අමාත්ය සරෝජා සාවිත්රි පෝල්රාජ් මහත්මිය විසින් කාන්තවන්ට, දරුවන්ට සිදුවන ප්රචණ්ඩත්වයට එරෙහිව 1938 අංකය ඔස්සේ පැමිණිලි කළ හැකි බවත්, එවන් පැමිණිලි සම්බන්ධයෙන් කඩිනමින් ක්රියාත්මක වන බවටත් මෙහිදී අවධාරණය කරනු ලැබීය. කාන්තවන් සම්බන්ධයෙන් ඔස්සේ සිදුවන පරිගණක අපරාධ කෙරෙහි දැඩිව ක්රියාකාරී වන බවත් ඇය මෙහිදී වැඩිදුරටත් පැවසීය.
මෙම කාන්තා සංසදය පාර්ලිමේන්තුව තුළ ආදර්ශවත් ලෙස ක්රියාත්මක වීම වගකීමක් බවත්, රටේ නීති සම්පාදනය කිරීමේ වගකීම් දරන ස්ථානය වන පාර්ලිමේන්තුවේ කාන්තවන්ට හිමි වන අභිමානය, ගෞරවය රටේ සියලුම ශ්රී ලංකික කාන්තාවන්ට, දරුවන්ට හිමි වන අභිමානය, ගෞරවය තීන්දු කරන මුලික අවස්ථාව වන බවටත් පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදයේ සභාපති අමාත්ය සරෝජා සාවිත්රි පෝල්රාජ් මහත්මිය පැවසීය.
பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராகப் பாராளுமன்றம் செம்மஞ்சள் நிறமாக மாறியது
- வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் தொடர்பில் ஊடக அறிக்கையிடலில் கவனம் தேவை. இவை சித்திரக் கதைகள் அல்ல, ஆனால் வாழ்க்கை! – பிரதமர் கௌரவ (கலாநிதி) ஹரிணி அமரசூரிய
- பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக 1938 என்ற விசேட இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு செய்யுங்கள் – பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ்
- ஒத்துழைப்பு வழங்கும் வகையில் “பாலின அடிப்படையிலான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஒன்றிணைவோம்” என்ற வாசகம் தாங்கிய கைப்பட்டி பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அணிவிப்பு
பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான (GBV) 16 நாள் உலகளாவிய செயல்முனைவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைமையில் பாராளுமன்றத்தில் நேற்று (06) பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிகழ்ச்சித்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பெண் பணியாளர்கள் செம்மஞ்சள் நிற சேலை அணிந்திருந்தனர்.
முதலாவதாக “பாலின அடிப்படையிலான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஒன்றிணைவோம்” எனும் வாசகம் தங்கிய கைப்பட்டி குழுக்களில் பிரதித் தவிசாளர் கௌரவ ஹேமாலி வீரசேகர உள்ளிட்ட பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றிய அங்கத்தவர்களால் கௌரவ சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வலவுக்கு அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க ஆகியோருக்கும் இந்த கைப்பட்டி அணிவிக்கப்பட்டது. இதன்போது பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.
அதனையடுத்து, “பாலின அடிப்படையிலான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஒன்றிணைவோம்” எனும் வாசகம் தங்கிய கைப்பட்டி பிரதமர் கௌரவ (கலாநிதி) ஹரிணி அமரசூரிய, சபை முதல்வர் கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் கௌரவ (வைத்தியகலாநிதி) நலிந்த ஜயதிஸ்ஸ, பிரதி சபாநாயகர் கௌரவ (வைத்தியகலாநிதி) ரிஸ்வி சாலி ஆகியோருக்கும் அணிவிக்கப்பட்டது. அத்துடன், அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த கைப்பட்டி மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையை ஒழித்தல் மற்றும் பாலின அடிப்படையிலான சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையிலான பொது உறுதிமொழி அடங்கிய பத்திரமும் இங்கு வழங்கப்பட்டது.
அதனையடுத்து நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பிரதமர் கௌரவ (கலாநிதி) ஹரிணி அமரசூரிய குறிப்பிடுகையில், வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள் தொடர்பான செய்திகள் சித்திரக்கதைகள் அல்ல என்றும் , வாழ்க்கை தொடர்பான விடயங்கள் என்பதால், அவை தொடர்பான ஊடக அறிக்கையிடல்களில் கவனம் தேவை எனவும் தெரிவித்தார். பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் பெரும்பாலும் அறியாதவர்களால் அல்ல என்றும் மிகவும் நெருக்கமானவர்களால் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் கௌரவ சரோஜா சாவித்ரி போல்ராஜ் குறிப்பிடுகையில், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக 1938 எனும் இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவித்தார். அவ்வாறான வன்முறைகள் தொடர்பில் துரிதமாக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பெண்கள் மீதான கணினி ஊடாக மேற்கொள்ளும் குற்றங்கள் தொடர்பின் கடினமாக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தப் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்துக்கு பாராளுமன்றத்தில் முன்னுதாரணமாக பணியாற்றுவது பொறுப்பானது எனவும், நாட்டில் சட்டம் இயற்றும் பொறுப்பு காணப்படும் இடமான பாராளுமன்றத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் அபிமானம், கௌரவம் நாட்டின் அனைத்துப் பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் அபிமானம் மற்றும் கௌரவத்தை தீர்மானிக்கும் பிரதான இடமாகும் என பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் அமைச்சர் கௌரவ சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்.